Get UPdate

Nassdo > Blog > Projects

Category: Projects

24 February
nassdo February 24, 2025 No Comments

நற்பிட்டிமுனையில் இரத்ததான முகாம் (2025.01.12)

“உதிரம் கொடுத்து உயிர் காப்போம்”  என்ற  தொனிப் பொருளின் அடிப்படையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையுடன் இணைந்து நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியத்தின்  (நெஸ்டோ) சுகாதாரப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்தான முகாம் 2025.01.12ம் திகதி கமு/கமு/அல் – அக்ஸா மத்திய மஹா வித்தியாலயத்தின் ஆராதணை மண்டபத்தில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் மற்றும் சக உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் நடை பெற்றது. இம் மாபெரும் இரத்ததான முகாமில்  நற்பிட்டிமுனை […]

9 May

2023ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களை கௌரவிக்கும் முப்பெரும் விழா.

நற்பிட்டிமுனை மண்ணில் 2023ம் வருடம் புலமை பரிசில் பரிட்சை எழுதிய மாணவர்களையும் அவர்களுக்கு துணையாக இருந்த அதிபர்கள், ஆசிரியர்களையும் கௌரவிக்கும் பெரு விழாவானது நற்பிட்டிமுனை கமு/கமு/அல் அக் ஷா மத்திய மஹா வித்யாலயத்தின் கேட்போர் கூடத்தில் 2023.12.16ம் திகதி நடைபெற்றது. இந்நிகழ்வின் போது 2023ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மற்றம் அப்பரீட்சைக்கு தோற்றிய மாணவ மாணவிகளுக்கும் அவர்களுக்கு கற்பித்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் மற்றும் பெறுமதி மிக்க பரிசீல்களும் வழங்கி வைக்கப்பட்டது. […]

9 May

அம்பரை மத்திய முகாம், 04ம் கிராம “ஜாமியுத் தௌஹித்” ஜும்ஆ பள்ளிவாசலுக்கு நிதியுதவி வழங்கிவைத்தல்.

அம்பரை, மத்திய முகாம், 04ம் கிராமத்தின் ஜாமியுத் தௌஹித் ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களினனால் நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்தி ஒன்றியத்திடம் (NASSDO) வேண்டிக் கொண்டதற்கமைவாக எமது உயர் பீட உறுப்பினர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிருந்து ஒரு தொகையினை குறித்த பள்ளிவாசலுக்காக 2023.08.18ம் திகதி பள்ளிவாயல் நிரவாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

9 May

நற்பிட்டிமுனை மஸ்ஜித் ஜாமிஇல் பலாஹ் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ஒலி வாங்கி உபரணங்கள் வழங்கியமை – 2023

மேற்படி பள்ளிவாசல் நிர்வாகத்தினர்களின் வேண்டுதலுக்கு அமைவாகவும் பள்ளிவாசலின் நீண்டகால தேவையாக இனம் காணப்பட்ட தொழுகைகளை நடத்துவதற்கு தேவையான ஒலிவாங்கி உடன் கூடிய Wireless உபரணங்கள் மற்றும் போடியம் ஒலிவாங்கி அடங்கிய பொதி எமது அமைப்பின் உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்களினால் 2023.06.16ம் திகதி  மேற்படி பள்ளிவாசல் நிர்வாகத்தினர்களிடம் கையளிக்கப்பட்டது.