
2023ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களை கௌரவிக்கும் முப்பெரும் விழா.
நற்பிட்டிமுனை மண்ணில் 2023ம் வருடம் புலமை பரிசில் பரிட்சை எழுதிய மாணவர்களையும் அவர்களுக்கு துணையாக இருந்த அதிபர்கள், ஆசிரியர்களையும் கௌரவிக்கும் பெரு விழாவானது நற்பிட்டிமுனை கமு/கமு/அல் அக் ஷா மத்திய மஹா வித்யாலயத்தின் கேட்போர் கூடத்தில் 2023.12.16ம் திகதி நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது 2023ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மற்றம் அப்பரீட்சைக்கு தோற்றிய மாணவ மாணவிகளுக்கும் அவர்களுக்கு கற்பித்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் மற்றும் பெறுமதி மிக்க பரிசீல்களும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக நற்பிட்டிமுனை மண்ணின் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் M. M. ஆஷிக் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் ஓய்வு பெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள, பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள், கல்விமான்கள் மற்றும் அமைப்பின் உயர் பீட உறுப்பினர்கள், அங்கத்தவர்கள் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.