25 February

நற்பிட்டிமுனை ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு தேவையான கதிரைகள் மற்றும் ஜனாஸா கபனிடுவதற்கு தேவையான புடைவைத் துணியும் அன்பளிப்பு – 2024.08.24
நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியத்தினால் ( Nassdo Natpiddimunai ) நற்பிட்டிமுனை ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு தேவையான கதிரைகள் மற்றும் ஜனாஸா கபனிடுவதற்கு தேவையான புடைவைத் துணியும் அன்பளிப்பு செய்தமை.
நற்பிட்டிமுனை ஜனாஸா நலன்புரி அமைப்பின் நீன்ட கால தேவையாக காணப்பட்ட கதிரைப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் Natpiddimunai NASSDO அமைப்பினால் சுமார் ரூபாய் 118,000.00 (ஒரு இலட்சத்தி பதினெட்டாயிரம்) பெறுமதியான 50 (ஐம்பது) கதிரைகளையும், ஜனாஸா கபனிடுவதற்கு தேவையான புடைவைத் துணினையும் அமைப்பின் உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்களின் கரங்களினால் 2024.08.23ம் திகதி வெள்ளிக்கிழமை நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியத்தின் அலுவலகதில் வைத்து நற்பிட்டிமுனை ஜனாஸா நலன்புரி அமைப்பின் அங்கத்தவர்களிடம் கையளிக்கப்பட்ட தருணம்.
அல்ஹம்துலில்லாஹ்.






