நட்பிடிமுனை சமூக சேவை மற்றும் அபிவிருத்தி அமைப்பின் (NASSDO – Qatar) 3ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த டிசம்பர் 18 அன்று கத்தாரில் மிகச் சிறப்பாகவும் விமர்சையாகவும் நடைபெற்றது.
கத்தாரின் தேசிய தினக் கொண்டாட்டங்களுடன் இணைந்து, நட்பிடிமுனை சமூக சேவை மற்றும் அபிவிருத்தி அமைப்பின் (NASSDO – Qatar) 3ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த டிசம்பர் 18 அன்று கத்தாரில் மிகச் சிறப்பாகவும் விமர்சையாகவும் நடைபெற்றது.
கத்தார் நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டு, அந்நாட்டின் வளர்ச்சி, அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கு NASSDO – Qatar சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டதுடன், அமைப்பின் உறுப்பினர்கள் இணைந்து தேசிய தின மகிழ்ச்சியையும் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
இந்த இரட்டைத் திருவிழா நிகழ்வு, உறுப்பினர்கள் மற்றும் குடும்பங்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் ஒருமைப்பாட்டையும் உருவாக்கியது.
கடந்த மூன்று ஆண்டுகளாக நட்பிடிமுனை சமூகத்தின் நலனுக்காக கல்வி, சமூக சேவை, அவசர உதவி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் அயராது பணியாற்றி வரும் NASSDO உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இந்நிகழ்வில் விசேடமாக கௌரவிக்கப்பட்டனர். அவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டி பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவின் முக்கிய அம்சமாக, NASSDO – Qatar அமைப்பின் புதிய அதிகாரப்பூர்வ சீருடை (Official Uniform) அறிமுகம் செய்து வைக்கப்பட்டு, அமைப்பின் ஒழுங்கமைப்பு மற்றும் எதிர்காலப் பயணத்திற்கு ஒரு புதிய அடையாளமாக இது வரவேற்கப்பட்டது.
நட்பிடிமுனை சமூக சேவை மற்றும் அபிவிருத்தி அமைப்பின் நிறுவனர், தலைவர் மற்றும் வாழ்வாதார பிரிவு தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்து வரும்
Mr. I.L. அப்துல் குதூஸ் (Abdul Kuthoos) அவர்களுக்கு, அவர்களின் தொலைநோக்கு தலைமையும், தொடர்ந்த அர்ப்பணிப்பும், தன்னலமற்ற சமூக சேவைகளையும் பாராட்டி நினைவுச் சின்னம் (Memento) வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.
அதேபோன்று அமைப்பின் நிறுவனர், துணைத் தலைவர் மற்றும் கல்வி பிரிவு தலைவர் ஆகிய பொறுப்புகளை சிறப்பாக வகித்து வரும்
Mr. ஜமால்தீன் முஹம்மத் மிஹ்லார் (Mihlar JM) அவர்களுக்கு, அவர்களின் அளப்பரிய சமூக மற்றும் கல்விச் சேவைகளைப் பாராட்டி பரிசும் நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதேபோன்று,
சிறப்பு விருந்தினர்கள், ஊடக பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்களின் குடும்பங்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு, NASSDO – Qatar அமைப்பின் சமூகப் பயணத்திற்கு ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்தது.
எதிர்காலத்திலும் உலகின் பல நாடுகளில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் ஒத்துழைப்புடன், நட்பிடிமுனை சமூகத்தின் முன்னேற்றத்திற்காக NASSDO தனது சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் என்ற உறுதியுடன், 3ஆம் ஆண்டு நிறைவு விழா இனிய நினைவுகளுடன் நிறைவுற்றது.



