சென்ட்ரல் கேம்ப், சவளக்கடை, அல் மஸ்ஜிதுல் ஸாலிஹீன் அரபுக் கல்லூரிக்கான காணியினை கொள்வனவு செய்வதற்கான நிதி உதவி
சென்ட்ரல் கேம்ப், சவளக்கடை, அல் மஸ்ஜிதுல் ஸாலிஹீன் அரபுக் கல்லூரிக்கான காணியினை கொள்வனவு செய்வதற்கான நிதி உதவியாக எமது அமைப்பினால் காசோலை கையளிக்கப்பட்ட நிகழ்வு
2025 டிசம்பர் 8 அன்று இடம் பெற்றது.
இதில் ரூபாய் 53,000.00 தொகையினைக் கொண்ட காசோலை, குறித்த பள்ளிவாசல் வளாகத்தில் வைத்து, எமது அமைப்பின் உயர் பீட உறுப்பினர்களால் அரபுக் கல்லூரியின் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இறைக்கல்வி முன்னேற்றம் மற்றும் சமூக வளர்ச்சி நோக்கிய ஒரு பணிவான பங்களிப்பாக இதனை நாம் கருதுகிறோம். அல்லாஹ் எமது முயற்சிகளை ஏற்றுக்கொண்டு, இந்த உன்னத பணிக்கு தொடர்ச்சியான வெற்றியை வழங்குவானாக.




