25 February

எமது நற்பிட்டிமுனை கிராமத்தில் இனங்காணப்பட்ட வறிய குடும்பங்களுக்கான உலர் உணவு – 2024.12.12
அல்ஹம்துலில்லாஹ்
எமது நற்பிட்டிமுனை கிராமத்தில் இனங்காணப்பட்ட வறிய குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வானது 2024.12.12ம் திகதி Natpiddimunai Nassdo அமைப்பின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலகத்தின் சமூக சேவை உத்தியோகத்தர் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் உலர் உணவு பொதிகளை அவர்களின் கரங்களினாலும் எமது அமைப்பின் உறுப்பினர்களின் கரங்களினாலும் இனங்காணப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கு உதவி புரிந்த எமது அமைப்பின் உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் அனைவர்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.























