Get UPdate

Nassdo > Blog > Projects > ஆலோசனை வழிகாட்டல் மற்றும் ஊக்குவிப்பு கருத்தரங்கு (2026-02-09)

ஆலோசனை வழிகாட்டல் மற்றும் ஊக்குவிப்பு கருத்தரங்கு (2026-02-09)

nassdo February 13, 2026 No Comments

ஆலோசனை வழிகாட்டல் மற்றும் ஊக்குவிப்பு கருத்தரங்கு (2026-02-09)

இன்று நமது NASSDO (Natpiddimunai Social Services and Development Organization) சமூகச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆலோசனை, வழிகாட்டல் மற்றும் ஊக்குவிப்பு கருத்தரங்கு மிகச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்

நமது கிராமத்தைச் சேர்ந்த பாடசாலைகளும், மேலும் நமது கிராமத்திற்கு வெளியிலுள்ள பாடசாலைகளும் மற்றும் கல்முனை ஹாமியா அரபுக் கல்லூரி மாணவர்களும் இணைந்து கலந்து கொண்டு, சுமார் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பயனுள்ள நிகழ்வில் பங்கேற்றமை எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த நிகழ்வு நமது சமூகத்தில் ஒற்றுமையையும், கைகோர்த்து செயல்படும் பண்பையும் வெளிப்படுத்தும் ஒரு அழகான எடுத்துக்காட்டாக அமைந்தது.

மாணவர்களை அனுப்பி வைத்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து பாடசாலை அதிபர்கள், அரபுக் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், ஆதரவு ஆசிரியர்கள், ஆலோசகர்கள், மற்றும் நமது NASSDO சமூகச் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இந்த கருத்தரங்கின் மூலம் மாணவர்கள் தங்களின் திறமைகளை அடையாளம் காணவும், எதிர்கால இலக்குகளைத் தெளிவாக நிர்ணயிக்கவும், G.C.E (O/L) பரீட்சையை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும் தேவையான ஆலோசனைகளையும் ஊக்கத்தையும் பெற்றுள்ளனர்.

இது அவர்களின் கல்வி பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.

இந்த நிகழ்வின் சிறப்பு பேச்சாளர்
அஷ்ஷெய்க் A.L.M. பைஸல் மதனி (BA, MA) உளவியல் ஆலோசகர், ஊக்கமளிப்பு பேச்சாளர் பிரதேச செயலகம் அக்கரைப்பற்று அவர்களுக்கும், எங்களின் சிறப்பு நன்றிகள். மேலும், நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைத்து ஒருங்கிணைப்பாளர்களுக்கும் எங்களின் மனமார்ந்த பாராட்டுகள்.

நடைபெறவுள்ள G.C.E (O/L) பரீட்சையில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் எங்களின் இதயம் கனிந்த வாழ்த்துகள்.

அனைவரும் சிறப்பாக தேர்ச்சி பெற்று, உயர்ந்த சாதனைகளைப் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டுகிறோம்.

கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்து வரும் NASSDO சமூகச் சங்கம், எதிர்காலத்திலும் இதுபோன்ற பல பயனுள்ள நிகழ்வுகளை நடத்தி, நமது சமூகத்தின் பெருமையை உயர்த்தி நிற்க வாழ்த்துகிறோம்.

இந்த சமூகத்துடன் கைகோர்த்து நமது சமூகத்தின் சிறந்த எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்!

 

Write a comment

Your email address will not be published. Required fields are marked *